×

இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக வாக்களித்த 7 பழங்குடியின மக்கள்: கிரேட் நிகோபர் தீவில் நெகிழ்ச்சி

அந்தமான்: இந்திய தேர்தல் வரலாற்றில் கிரேட் நிகோபர் தீவை சேர்ந்த 7 பழங்குடியின மக்கள் முதன்முறையாக வாக்களித்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ேநற்று முன்தினம் நாடு முழுவதும் 102 மக்களவை தொகுதிகளில் நடந்தது. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் இந்த தேர்தலில் வாக்களித்த்துள்ளனர்.

எவ்வித வெளியுலக தொடர்பும்மின்றி வாழும் இந்த பழங்குடியின மக்களுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் அவர்களுக்கு வாக்களிப்பது எப்படி என்பது குறித்து உரிய பயிற்சியளிக்கப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் வாக்குச்சாவடிக்கு சென்ற பழங்குடியின மக்கள், அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். பின்னர் அங்கிருந்த செல்ஃபி பூத்தில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

மலைப் பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு கழுதையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுமந்து சென்று வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது அதனையும் தாண்டி அந்தமானின் பழங்குடியின மக்களுக்கு முதன் முறையாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

The post இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக வாக்களித்த 7 பழங்குடியின மக்கள்: கிரேட் நிகோபர் தீவில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Great Nicobar Island ,Andaman ,Dinakaran ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...