- வேலூர் பாராளுமன்றம்
- வேலூர்
- வேலூர் நாடாளுமன்ற தொகுதி
- தம்காடு
- காட்பாடி
- KV குப்புரம்
- குடியாட்டம்
- Ampur
- வாணியம்பாடி.…
வேலூர், ஏப்.21: வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 28 ஆயிரத்து 273 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 40 ஆயிரத்து 222 பேர். பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 87 ஆயிரத்து 838 பேர். இதர பிரிவினர் 213 பேர். நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவு முடிவில் பதிவான மொத்த வாக்குககள் 11 லட்சத்து 23 ஆயிரத்து 715 பேர். பதிவான வாக்கு சதவீதம் 73.53 சதவீதமாகும்.
அதேநேரத்தில், பதிவான வாக்குககளில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்து 787 பேர். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 74 ஆயிரத்து 826 பேர். அதேநேரத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது 7 லட்சத்து 87 ஆயிரத்து 838 பெண் வாக்காளர்களில், வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தவர்கள் 5 லட்சத்து 74 ஆயிரத்து 826 பேர். வாக்குச்சாவடிகளுக்கு வராத பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 12 பேர். அதேபோல் 7 லட்சத்து 40 ஆயிரத்து 222 ஆண் வாக்காளர்களில், வாக்குச்சாவடிகளுக்கு வராதவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து 435 பேர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 லட்சத்து 28 ஆயிரத்து 100 வாக்குகள் பதிவானது. இந்த முறை பதிவான வாக்குகளை ஒப்பிடுகையில் 95 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post வாக்களித்தவர்களில் பெண்களே அதிகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் appeared first on Dinakaran.