×

ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால் பரபரப்பு சித்திரை தேரோட்டம் பெரிய கோயிலில் பக்தர்கள் கூட்டம்

 

தஞ்சாவூர், ஏப். 21: தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா முன்னிட்டு முக்கிய விழாவான தேர்த் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வழக்கத்தை விட அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் காணப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

பெரியகோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து தரிசனம் செய்து விட்டு பெரிய கோவிலை சுற்றிப்பார்த்து விட்டு சென்றனர். இதனால் நேற்று பெரிய கோவில் பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

 

The post ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால் பரபரப்பு சித்திரை தேரோட்டம் பெரிய கோயிலில் பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chitra Chariot ,Thanjavur ,Tanjore Periya Temple ,Chitrai Festival ,
× RELATED மெலட்டூர், சுற்று வட்டார பகுதியில்...