- விராலிமலை மீனாட்சியம்மன் கோயில்
- விராலிமலை
- மீக்கன்னுடையல்
- கோவில்
- விராலிமலை அம்மன் கோயில் தெரு
- விராலிமலை மீக்கன்னுடையல் கோயில் மலர் தெளிப்பு விழா
- தின மலர்
விராலிமலை, ஏப்.21:விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா வரும் 23ம் தேதி இரவு விடிய விடிய நடைபெறுகிறது. விராலிமலை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள மெய்க்கண்ணுடையாள் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் வடக்கு பார்த்து அமர்ந்துள்ள இக்கோயில் தெய்வமான மெய்க்கண்ணுடையாள் அம்மன் அப்பகுதி கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் மார்கழி மாதம் குத்துவிளக்கு பூஜை, மார்கழி மண்டகபடி, சித்திரை திருவிழா என பல்வேறு விழாக்கள் வருடம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலின் முக்கிய விழாவான சித்திரை விழா சித்திரை மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக அன்று இரவு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.
இதில் பல்வேறு அமைப்பினர் சார்பில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட பல்லாக்குகள் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகளுடன் விராலிமலை வீதிகளில் இரவு முழுவதும் வலம் வரும். இவ்வாறு வலம் வரும் பல்லாக்குகளில் பெண் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற பூக்களை தட்டுகளில் சுமந்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபடுவார்கள். விழாவையொட்டி பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆங்காங்கே இசை கச்சேரிகள் உள்பட நிகழ்ச்சிகள் நடைபெறும். 23ம்தேதி இரவு நடைபெறும் பாதுகாப்புடன் நடத்த நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
The post விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா appeared first on Dinakaran.