×

அடுத்த பிரதமரை கைகாட்டும் கிங் மேக்கர் மு.க.ஸ்டாலின்: வீட்டு வசதி வாரிய தலைவர் வாழ்த்து

சென்னை: பொள்ளாச்சி, கோவை ஆகிய தொகுதிகளுக்கு திமுக சார்பில் சிறப்பு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன். தேர்தல் பிரசாரம் முடியும் வரை அங்கு தங்கியிருந்து பணியாற்றியவர் நேற்று முன்தினம் தி.நகரில் தனது வாக்கை செலுத்தினார்.

இந்தநிலையில், பூச்சிமுருகன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘40 தொகுதிகள், 20 தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டங்கள், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பொதுமக்களை சந்திக்க நகர்வலம், ஓயாத உழைப்பால் விளையப் போகும் மாபெரும் சாதனை வெற்றி, அடுத்த பிரதமரை கை காட்ட இருக்கும் கிங் மேக்கர், தமிழினத்தின் தவப் புதல்வர் எங்கள் திராவிட நாயகருக்கு வாழ்த்துகள்’’ என்று கூறியுள்ளார்.

 

The post அடுத்த பிரதமரை கைகாட்டும் கிங் மேக்கர் மு.க.ஸ்டாலின்: வீட்டு வசதி வாரிய தலைவர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Kingmaker ,M.K.Stalin ,Prime ,Chairman of the ,Housing ,Board ,CHENNAI ,Poochi Murugan ,Housing Board ,DMK ,Pollachi ,Coimbatore ,D. Nagar ,King Maker ,
× RELATED நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப்...