×
Saravana Stores

கொல்கத்தாவுடன் இன்று மோதல்: நெருக்கடியில் ஆர்சிபி

கொல்கத்தா: ஐபிஎல் டி20 தொடரின் 36வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. லீக் சுற்றில் முதல் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக முன்னாள் சாம்பியன் கொல்கத்தா திகழ்கிறது. இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ அணிகளை வீழ்த்தியுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சென்னை, முதல் சாம்பியன் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. கடைசியாக ராஜஸ்தானுடன் விளையாடிய ஆட்டத்தில், அருமையான வெற்றி வாய்ப்பை வீணடித்ததால் கேகேஆர் வீரர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதனால் ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா இன்று வெற்றிக்கு கூடுதல் முனைப்பு காட்டும். அதற்கேற்ப அந்த அணியில் பிலிப்ஸ், நரைன், ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ், ரஸ்ஸல், வெங்கடேஷ், வருண் என பேட்டிங் வரிசை மிரட்டுகிறது. ஸ்டார்க், ஹர்ஷித், நரைன், வருண், ரஸ்ஸல் பந்துவீச்சும் அணிக்கு பலம் சேர்க்கிறது. பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய கொல்கத்தா, இப்போது தனது சொந்த களத்தில் மீண்டும் எதிர்க்கொள்வது கூடுதல் பலம்.

அதே சமயம், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள ஆர்சிபி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் பஞ்சாப் அணியை மட்டுமே வீழ்த்தி இருக்கிறது. எஞ்சிய ஆட்டங்களில் சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை, ஐதராபாத், லக்னோ அணிகளிடம் தோல்வியை தழுவியது. கோஹ்லி, பத்திதார், டு பிளெஸ்ஸி, தினேஷ், மேக்ஸ்வெல் என அதிரடி வீரர்கள் இருந்தும், இவர்கள் ஒருங்கிணைந்து ரன் குவிக்கத் தவறுவதால் ஆர்சிபி பல ஆட்டங்களில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. பந்துவீச்சும் பலவீனமாகவே உள்ளது. முதல் சுற்றில் 7 ஆட்டங்களிலும் ஆடி முடித்துவிட்ட பெங்களூரு, எஞ்சிய 7 ஆட்டங்களில் அரை டஜன் வெற்றியை வசப்படுத்த வேண்டியது அவசியம். எனவே, கடும் நெருக்கடியுடன் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ், ஈடன் கார்டனில் நைட் ரைடர்ஸ் சவாலை சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

The post கொல்கத்தாவுடன் இன்று மோதல்: நெருக்கடியில் ஆர்சிபி appeared first on Dinakaran.

Tags : Kolkata ,RCB ,IPL T20 ,Kolkata Knight Riders ,Royal Challengers ,Bangalore ,Dinakaran ,
× RELATED டாணா புயல் எதிரொலி; கொல்கத்தா மற்றும்...