- தலை
- அபிஷேக்
- ஷபாஸ்
- ஐதராபாத்
- லில்லி தலைநகரங்கள்
- புது தில்லி
- ஐபிஎல் லீக்
- தில்லி தலைநகரம்
- ஜெட்லி அரங்கை இயக்கவும்
புதுடெல்லி: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டி20 உலக சாதனைகளை அடித்து நொறுக்கிய சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித்தது. ருண் ஜெட்லி அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பன்ட் சன்ரைசர்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இணைந்து சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். மரண மாஸ் பார்மில் இருக்கும் இருவரும் முதல் ஓவரிலேயே அதிரடியை ஆரம்பிக்க, சன்ரைசர்ஸ் ஸ்கோர் ஒளிவேகத்தில்! பறந்தது. வர்களின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி பந்துவீச்சாளர்களும் ஃபீல்டர்களும் கைகளைப் பிசைந்தபடி செய்வதறியாது திகைத்து நின்றனர். ஓவருக்கு 20 ரன்னுக்கும் மேல் கிடைக்க, சன்ரைசர்ஸ் 5 ஓவரிலேயே 100 ரன்னை கடந்தது. பவர்பிளேயில் மட்டுமே 125 ரன் கிடைக்க, இம்முறை டி20ல் 300 ரன் என்ற உலக சாதனை சன்ரைசர்சுக்கு எளிதாக வசப்படும் என்றே தோன்றியது. னால், குல்தீப் யாதவ் துல்லியமாகப் பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதுடன் விக்கெட் வேட்டை நடத்தி… சன்ரைசர்ஸ் ஸ்கோர் வேகத்துக்கு பிரேக் போட்டார். அவர் வீசிய 7வது ஓவரில் அபிஷேக் 46 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹெட் 89 ரன் (32 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி குல்தீப் சுழலில் ஸ்டப்ஸ் வசம் பிடிபட்டார். கிளாசன் 15 ரன் எடுத்து அக்சர் சுழலில் ஆட்டமிழக்க, கேப்பிடல்ஸ் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனாலும், நிதிஷ் குமார் – ஷாபாஸ் அகமது இணைந்து அதிரடியை தொடர சன்ரைசர்ஸ் 200 ரன்னை கடந்து முன்னேறியது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தனர். நிதிஷ் 37 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அப்துல் சமத் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கம்மின்ஸ் 1 ரன்னில் ரன் அவுட்டாக, சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித்தது. ஷாபாஸ் 59 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4, முகேஷ் குமார், அக்சர் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது.
The post ஹெட், அபிஷேக், ஷாபாஸ் அதிரடி ல்லி கேப்பிடல்சுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 266 ரன் குவிப்பு appeared first on Dinakaran.