×

பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழநி மலைக்கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இவர்கள் போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜையில் பங்கேற்றனர். இவர்களில் பலரும் நல்ல தமிழ் பெயரை சூடியுள்ளனர். வெளிநாட்டை சேர்ந்த இவர்கள் அனைவரும் நெற்றி நிறைய விபூதி, சந்தனம், குங்குமத்துடன் காட்சியளித்ததை தமிழக பக்தர்கள் பலரும் வியப்புடன் பார்த்து சென்றனர்.

The post பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Palani Temple ,Palani ,Dindigul district ,Palani Malaikoil ,Tamil Nadu ,Sami ,Tokyo province of ,Japan ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்