×

தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரிப்பு 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில்: 24ம் தேதி வரை வெப்ப அலை வீசும் அபாயம்

சென்னை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதமாக நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நடந்தது. வெப்ப தாக்குதலால் அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில்தான் அதிகமாக பிரசாரம் செய்யப்பட்டது. தமிழகத்தில் வெயில் கொடுமைக்கு தேர்தல் வாக்குப்பதிவின்போது மட்டும் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்றும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பகல் நேரங்களில் குறிப்பாக நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், அதிகமாக தண்ணீர் குடிக்கவும், காலை, மாலை நேரங்களில் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்களிடம் பகலில் வெளியே வருவதற்கு அச்சப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேர்தலுக்காக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று தங்கிவிட்டனர்.

ஆனாலும் வெயிலுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்னும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினத்தை பொறுத்தவரை 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதேபோல், இன்றிலிருந்து 3ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99-100 டிகிரி பாரன்ஹீட் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி பாரன்ஹீட் வரையும் இருக்கக்கூடும். வருகிற 24ம் தேதி வரை வெப்ப அலை வீசும் அபாயம் உள்ளது. தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பம் சராசரியைவிட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரிப்பு 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில்: 24ம் தேதி வரை வெப்ப அலை வீசும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,heat ,till 24th ,
× RELATED மே-2, 3ம் தேதிகளில் வட தமிழக உள்...