- சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி
- அரியலூர்
- சிதம்பரம்
- Anganur
- அரியலூர் மாவட்டம்
- இந்திய விடுதலைப் புலிகள்
- தோல்
- திருமாவளவன்
- தின மலர்
அரியலூர், ஏப்.20:சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் காலை முதல் அமைதியான விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது தாயாருடன் வருகை தந்து, தனது வாக்கினை செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் தேவனூர் கிராமத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தனது வாக்கினை செலுத்தினார். அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தனது வாக்கினை செலுத்தினார்.தாமரைக்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் முன்னாள் அரசு கொறடாவும், அதிமுக மாவட்ட செயலாளருமான தாமரை.
ராஜேந்திரன் தனது வாக்கினை செலுத்தினர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், மணக்குடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரியலூர் எம்.எல்.ஏ சின்னப்பா தனது வாக்கினை செலுத்தினர்.
The post சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விறு விறுப்பான வாக்குப்பதிவு appeared first on Dinakaran.