×

காரைக்காலில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு

காரைக்கால்,ஏப்.20: காரைக்காலில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தால் காரைக்கால் மாவட்டத்திற்கு மேலிட பார்வையாளர் (பொது பிரிவு) நியமிக்கப்பட்ட அஷித்தா மிஸ்ரா காலை முதல் பல்வேறு வாக்குச்சாவடிகளில் நேரடியாக சென்று நடைபெறும் தேர்தல் பணிகளை பார்வையிட்டார். பின்னர் வாக்காளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், காவலர்கள் கவனமுடன் பணியாற்றுகிறார்கள் என்பது குறித்தும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் நேர்மையாகவும் கண்ணியமுடனும் தேர்தல் நடத்தப்படுகிறதா என வாக்குப்பதிவு முடியும் வரை தொடர் ஆய்வு மேற்கொண்டார்.

The post காரைக்காலில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Ashita Mishra ,Election Commission of India ,Dinakaran ,
× RELATED காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக்...