×
Saravana Stores

சேது பொறியியல் கல்லூரியில் ஊக்கத் தொகைக்கான தேர்வு: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

விருதுநகர், ஏப். 20: சேது பொறியியல் கல்லூரி நிறுவனத் தலைவர் எஸ.முகமது ஜலில் மற்றும் நிர்வாக அதிகாரிகள் முதல்வர் ஒப்புதலில் சேது பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு ஏப். 27ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடத்தப்படுகிறது. பிளஸ் 2 பாடத்திட்டத்தில் உள்ள கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் மற்றும் பொது அறிவு என 50 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெறும்.

ஒவ்வொரு கேள்விக்கும் வழங்கப்படும் நான்கு விடைகளில் சரியானதை மாணவர்கள் தேர்வு செய்யும் வகையில் ஒரு மணி நேரம் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியலில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படும். தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு கல்லூரி பேருந்து வசதி செய்து தரப்படும். மாணவர்கள் தேர்வு எழுதும்போது, பெற்றோர்களுக்கு பொறியியல் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்கள் உரை நிகழ்த்துவர்.

இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், சேது இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி இணையதளத்தின் மூலமாக பெயர்களை பதிவு செய்யலாம். மேலும் https://sethumerittest.in/registration/ என்ற லிங்க் வாயிலாகவும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு சேது பொறியியல் கல்லூரி கணித பேராசிரியர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமண ராஜ் 99449 62060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 

The post சேது பொறியியல் கல்லூரியில் ஊக்கத் தொகைக்கான தேர்வு: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sethu College of Engineering ,Virudhunagar ,Setu Engineering College ,President ,Muhammad Jalil ,Setu Engineering College Plus ,Sethu Engineering College ,Dinakaran ,
× RELATED அவரையில் காய்ப்புழு தாக்குதல் தடுக்கும் முறை