பரமக்குடி, ஏப். 20: பரமக்குடியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனியின் உறவினர் கார் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்பி சந்தீஸ் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதை யொட்டி பரமக்குடி பாரதியார் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவை பார்வையிடுவதற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பரமக்குடி தொகுதி பொறுப்பாளரும் நவாஸ்கனியின் உறவினருமான நிஜாம் என்பவர் காரில் வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த பாஜவினர் நிஜாமிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அங்கிருந்த ரமேஷ் என்பவர் திடீரென நிஜாமின் காரின் பின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை விரட்டினர். மேலும், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.சந்தீஸ் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு தகராறு ஈடுபட்ட கார் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
The post இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு appeared first on Dinakaran.