×

இயற்கை உரங்களை பயன்படுத்தினால் மண்ணின் வளம் பேணிகாக்கப்படும் மண் வள தின விழாவில் ஆலோசனை

விராலிமலை : உலக மண் வள தினத்தையொட்டி விராலிமலை வட்டாரத்தில் கொடும்பாளூர் கிராமத்தில் நேற்று 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற மண்வள தினவிழா நேற்று நடைபெற்றது. அதில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் மண்வளத்தை எவ்வாறு பேணி பாதுகாப்பது என்று நடைமுறை விளக்கம் அளிக்கப்பட்டது.விழாவில் கருத்து கண்காட்சி, பேரணி, மண்வள தினத்தின் ரங்கோலிகோலம் வரைந்து அதன் மூலம் விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் பேணிப் பாதுகாக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் நஞ்சில்லா உணவு தம்முடைய சந்ததிக்கு வழங்கலாம் என விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னோடி விவசாயி பன்னீர்செல்வம், இயற்கை பண்ணையம் மூலம் தன்னுடைய அனுபவத்தின் மூலம் தான் பெற்ற பயனை விவசாயிகள் மத்தியில் எடுத்துக் கூறினார். இனிவரும் காலங்களில் விவசாயிகள் இயற்கை முறையில் பண்ணையம் செய்ய உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி தமிழ்செல்வி, இயற்கை விவசாயம் குறித்து சிறப்புரை ஆற்றினார். வேளாண் அலுவலர் ஷீலாராணி கருத்து கண்காட்சி பற்றிக் கூறினார். துணை வேளாண்மை அலுவலர் தங்கராசு வரவேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் ரேவதி, அருண் குமார், ராஜா, செல்வி ஷாலினி, செல்வி பர்காணா பேகம், பாண்டியன் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இதேபோல் அன்னவாசல் வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில் வயலோகத்தில் மண்வள தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது. புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் ராம்.சிவக்குமார் தலைமை வகித்தார். அனைவரையும் கந்தர்வகோட்டை வேளாண் அதிகாரி அன்பரசன் வரவேற்றார்.மண்தின விழாவில் பேசிய இணை இயக்குனர், ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரத்திற்கு விவசாயிகள் மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வணிகம் மற்றும் விற்பனை துறை துணை இயக்குனர் சங்கரலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் ரத்தினவேல், மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின், முன்னாள் அட்மா சேர்மன் முத்துக்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்….

The post இயற்கை உரங்களை பயன்படுத்தினால் மண்ணின் வளம் பேணிகாக்கப்படும் மண் வள தின விழாவில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Soil Resource Day ,Viralimalai ,World Soil Resources Day ,Kodumbalur ,Viralimalayam ,Dinakaran ,
× RELATED விராலிமலை சந்தையில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை