- சென்னை
- தெலுங்கானா
- கவர்னர்
- தென் சென்னை
- பாஜக
- தமிழிசாய் ச Sound ந்தரராஜன்
- காவேரி உயர்நிலைப்பள்ளி
- saligram
- DMUDI
- பொதுச்செயலர்
- பிரேமலதா விஜயகாந்த்
- விஜய பிரபாகரன்
- Tamilisai
- பிரேமலதா
சென்னை: தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென் சென்னை பாஜ வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் தனது வாக்கை நேற்று காலை பதிவு செய்தார். அங்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் வாக்குகளை பதிவு செய்தனர். அப்போது தமிழிசை சவுந்தரராஜனும், பிரேமலதா விஜயகாந்த்தும் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன், முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். எதிர் அணியில் உள்ள இருவரும் ஓட்டு போட வந்த போது சந்தித்துக் கொண்ட நிலையில் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். விஜயகாந்த் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமிழிசை, ‘‘ஒரு வேட்பாளராக பெருமை மிகு வாக்காளரை சந்தித்ததில் மகிழ்ச்சி’’ என்றார்.
The post ஒரே வாக்குச்சாவடியில் வாக்களித்தனர் தமிழிசை – பிரேமலதா கட்டியணைத்து மகிழ்ச்சி appeared first on Dinakaran.