×
Saravana Stores

8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது லக்னோ: கே எல் ராகுல் அதிரடி

லக்னோ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீசியது. ரகானே, ரச்சின் இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். ரச்சின் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற சென்னை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

ருதுராஜ் 17 ரன், ரகானே 36 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். அதிரடி வீரர் ஷிவம் துபே 3 ரன், சமீர் ரிஸ்வி 1 ரன்னில் வெளியேற, சூப்பர் கிங்ஸ் 12.2 ஓவரில் 90 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஜடேஜா – மொயீன் அலி ஜோடி 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக 51 ரன் சேர்த்து ஸ்கோரை உயர்த்தியது. ஜடேஜா 34 பந்தில் அரை சதம் அடித்தார். பிஷ்னோய் வீசிய 18வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய மொயீன் 30 ரன் எடுத்து (20 பந்து, 3 சிக்சர்) அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் எம்.எஸ்.தோனி அதிரடியில் இறங்க, சென்னை ஸ்கோர் எகிறியது. சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. ஜடேஜா 57 ரன் (40 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), தோனி 28 ரன்னுடன் (9 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் க்ருணால் 2, மோஷின், யாஷ், பிஷ்னோய், ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய சூப்பர் ஜயன்ட்ஸ்19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு180 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கே எல் ராகுல் அதிகபட்சமாக 82 ரன் (53 பந்து,9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். குயின்டன் டி காக் 54 ரன், நிகோலஸ் பூரன் 23* ரன் எடுத்தனர். சென்னை பந்துவீச்சில் முஸ்டபிர் ரகுமான், மதீஷா பதிரானா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

The post 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது லக்னோ: கே எல் ராகுல் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Chennai ,KL Rahul ,IPL league ,Chennai Super Kings ,Lucknow Supergiants ,Vajpayee Stadium ,Ragane ,Rachin ,CSK ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேசத்தில் கலவரம் நிகழ்ந்த...