வாஷிங்டன்: ஐநா.வின் அதிகாரம் மிகுந்த அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளும், இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க் ஐ நா, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அனைத்து தகுதியும் இந்தியாவிற்கு உள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில், எலன் மஸ்க் கருத்து பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் நேற்று கூறுகையில்,‘‘ 21ம் நூற்றாண்டை பிரதிபலிக்கும் வகையிலும் ஐநா சபை உள்ளிட்ட ஐநா, அமைப்புகளில் சீர்திருத்தங்கள் செய்வதற்கும் நாங்கள் நிச்சயமாக ஆதரவு தெரிவிக்கிறோம்’’ என்றார்.
The post ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம்: அமெரிக்கா மீண்டும் ஆதரவு appeared first on Dinakaran.