×

தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!

ராணிப்பேட்டை: உலகின் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது. டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி செய்ய உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்படும். தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!! appeared first on Dinakaran.

Tags : Jaguar Land Rover ,Tamil Nadu ,Ranipettai ,Tata Motors ,Jaguar ,Reuters ,Tata ,Ranipetta ,Jaguar Land ,
× RELATED வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை...