- அலஹப்பா பல்கலைக்கழகம்
- ஜி ரவி
- காரைக்குடி
- ஆண்டு விழா
- திணைக்களம்
- சிறப்பு
- கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல்
- காரைக்குடி அகப்பா பல்கலைக்கழகம்
- ரவிச்சந்திரன்
- கிராம்.
- ரவி
- துணை வேந்தர்
- தின மலர்
காரைக்குடி, ஏப்.18: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறையின் 9ம் ஆண்டு விழா நடந்தது. துறை மாணவர் சங்க தலைவர் ஆராய்ச்சி மாணவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், மாற்றுத்திறனாளி மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டு வருவதில் இத்துறை பெரும் பங்காற்றி வருகிறது. சிறப்பு கல்வியியல் துறை சமூக மேம்பாட்டிற்கான பங்களிப்பை நேரடியாக வழங்கி வருவதால் பிற துறையை விட தனித்துவம் பெற்று விளங்குகிறது.
அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இருந்தால் மட்டுமே சிறப்புக் குழந்தைகளுடன் இணைந்து செயல்பட முடியும். அந்த வகையில் பல்கலைக்கழக சிறப்பு கல்வியியல் துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது. சிறப்பு கல்வியியல் துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் உள்ளன. இத்துறை மாணவர்கள் அதற்கு தகுந்தார் போல் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறப்பு குழந்தைகளின் வாழ்க்கையினை மாற்றி அவர்களை நம்மால் வெற்றி பெற வைக்க முடியும்.
இப்பல்கலைக் கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் பாரா ஸ்போர்ட்ஸ் மையத்தின் மூலம் பட்டைய படிப்பு இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதிலும் மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். மாற்றுத்திறனாளி மாணர்கள் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஆட்சிமான்றக் குழு உறுப்பினர் முனைவர் குணசேகரன், முனைவர் ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல் appeared first on Dinakaran.