×

மணிப்பூர் பாஜ தலைவர் காங்கிரசில் இணைந்தார்

இம்பால்: மணிப்பூரில் பாஜவில் இருந்து நீக்கப்பட்ட இ த்விஜாமணி சிங் நேற்று காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் பேரவை உறுப்பினராக இருந்த இ த்விஜாமணி சிங் கடந்த 2022ம் ஆண்டு மணிப்பூர் பேரவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு தரவில்லை. இதையடுத்து காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார்.

இந்நிலையில் கட்சி விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இ த்விஜாமணி சிங் நேற்று பாஜவில் இருந்து விலக்கப்பட்டார். அங்கிருந்து வௌியேறிய சில மணி நேரங்களிலேயே இ த்விஜா மணி சிங் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

The post மணிப்பூர் பாஜ தலைவர் காங்கிரசில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Manipur ,BJP ,Congress ,E Dwijamani Singh ,Dwijamani Singh ,Manipur assembly elections ,Manipur BJP ,
× RELATED வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல்...