×

கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

மேலூர், ஏப்.18: கொட்டாம்பட்டி அருகே கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் அப்பாஸ் அலி மனைவி ரபீலா பேகம்(35). காய்கறி கடை நடத்தி வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த ராஜாமுகமது மனைவி சையது பானுவிடம்(35) ரூ.20 ஆயிரம் 2 வருடங்களுக்கு முன்பு கடன் வாங்கி இருந்தார். அசலும் வட்டியும் கட்டி விட்ட நிலையில், மேலும் பணம் தர வேண்டும் என சையது பானு, அவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் தகராறு முற்றவே, ரபீலா பேகத்தை சையது பானு உள்ளிட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொட்டாம்பட்டி போலீசார் சையது பானு(35), யாஸ்மின்(40), ஆயிசா பீவி, யூசுப் யூகன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Melur ,Kottampatti ,Abbas Ali ,Rapeela Begum ,Chokkalingapuram ,Kottayam ,
× RELATED ஒன்றிய அரசு அறிவித்துள்ள டங்ஸ்டன்...