×

திரெளபதி அம்மன் கோயிலில் பூங்கரக ஊர்வல நிகழ்ச்சி

ஓசூர், ஏப்.18: கர்நாடக மாநிலம், ஓசூர் அருகே ஹெப்பகோடி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பூங்கரக ஊர்வல நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ராமநவமியை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று அதிகாலை 3 மணி அளவில், திரௌபதி அம்மன் கோயிலிலிருந்து வெளியே வந்த பூங்கரகம், நகரம் முழுவதும் உள்ள தெருக்களில் சென்று, மீண்டும் கோயிலுக்குள் வந்தது. பூசாரி சந்துரு பூங்கரகத்தை சுமந்து மேளதாளத்திற்கு ஏற்ப நடனமாடி நகரம் முழுவதும் ஊர்வலமாக வந்தார். அதனை தொடர்ந்து பல்லக்கு ஊர்வலமும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திரெளபதி அம்மன் கோயிலில் பூங்கரக ஊர்வல நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thirelapathi Amman Temple ,Hosur ,Draupadi Amman temple ,Heppakodi ,Hosur, Karnataka ,Ramnavami ,Draupadi ,
× RELATED பூலாம்பாடி தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா