இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த 2 மாதமாக அந்நாட்டில் எக்ஸ் சேவையில் பல்வேறு தடங்கல் இருந்த நிலையில், தடை விதித்திருப்பதை நீதிமன்றத்தில் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அரசின் உத்தரவுக்கு இணங்க பல்வேறு கணக்குகள்/ பதிவுகளை எக்ஸ் தளம் முடக்காததால், தடை விதிக்கப்பட்டிருப்பதாக கருத்துரிமை அமைப்புகள் கூறியுள்ளன. இவ்விவகாரத்தில் உள்துறை செயலாளர் உரிய விளக்கம் அளிக்காவிடில், பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தடை: பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.