×

களைகட்டிய தேர்தல் திருவிழா.. ராமநாதபுரத்தில் தேர்தல் விளம்பரங்கள், கட்சிக்கொடிகளின்றி காட்சியளிக்கும் கொம்பூதி கிராமம்..!!

ராமநாதபுரம்: தேர்தல் திருவிழா களைகட்டி கொண்டிருக்கும் வேளையில் ராமநாதபுரத்துக்கு அருகே உள்ள கிராமம் எந்தவித தேர்தல் விளம்பரங்கள், கட்சிக்கொடிகளின்றி காட்சியளிக்கிறது. கொம்பூதி என்னும் கிராமத்தில் வசித்து வரும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் கிராமத்தில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை. கட்சிக்கொடிகள், தேர்தல் குறித்த பதாகைகள், சுவரொட்டிகள், வேட்பாளர்கள் முகம் பொரித்த ஸ்டிக்கர்கள் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் வேறுபாட்டால் எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காகவே பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை தொடர்வதாக கொம்பூதி கிரம மக்கள் கூறுகின்றன. வேட்பாளர்கள் தங்கள் ஊர்களில் பரப்புரை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும், இருப்பினும் தங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் எந்த கட்சி சார்பிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது இல்லை என்று தெரிவிக்கின்றனர். இதுபோக கிராமத்தில் வீதிதோறும் சிசிடிவி கேமராக்களையும் கொம்பூதி மக்கள் பொறுத்தியுள்ளனர்.

The post களைகட்டிய தேர்தல் திருவிழா.. ராமநாதபுரத்தில் தேர்தல் விளம்பரங்கள், கட்சிக்கொடிகளின்றி காட்சியளிக்கும் கொம்பூதி கிராமம்..!! appeared first on Dinakaran.

Tags : Weeded election festival ,Kombuthi ,Ramanathapuram ,Kombuthi village ,
× RELATED போக்சோ வழக்கில் ஆஜராகாத தாம்பரம்...