×

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாள் விழா: திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தீரன் சின்னமலை அவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் மைசூர் பகுதியில் திப்பு சுல்தானுடன் இணைந்து ஆங்கிலேயர்களின் வரி வசூலுக்கும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும் எதிராக 3 முறை போராடி வந்தவர்.

தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து வீரமரணம் அடைந்தவர். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏற்கனவே சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு மணிமண்டபமும், சென்னை கிண்டியில் சிலையும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீரன் சின்னமலையின் பிறந்தநாளன்று அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும்.

அந்த வகையில், 268வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று தீரன் சின்னமலையின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

The post சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாள் விழா: திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Theeran Chinnamalai ,Chief Minister ,M.K.Stalin ,Thiruvuruva ,CHENNAI ,M. K. Stalin ,Guindy ,
× RELATED சொல்லிட்டாங்க…