×

பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

 

பாலக்காடு, ஏப்.17: பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் மகளிர் அணித்தலைவர் சிந்து பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தை காங்கிரஸ் மாவட்ட கமிட்டி தலைவர் தங்கப்பன் தொடங்கி வைத்தார். பாலக்காடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் கமிட்டி அமைப்பாளர்களான சி.சந்தரன், பாபுராஜ் ஆகியோர் மகளிர் அணியினருக்கு தேர்தல் பிரசாரங்கள் குறித்து வழிமுறைபடுத்தினர்.

ஒவ்வொரு வீதிகளிலும் வீடு, வீடாக சென்று குடும்பத் தலைவியர்களிடமும், முதன்முறையாக வாக்களிக்ககூடிய பெண்களிடமும் வேட்பாளர்களின் திறமைகளையும், அவர்கள் தொகுதிக்கு செய்துள்ள மேம்பாடுகள் குறித்து விழிப்புணர்வு செய்து வாக்குகள் சேகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், வேட்பாளர் ராகுல்காந்தி பாலக்காடு கோட்டை மைதானத்தில் வந்து பொதுக்கூட்ட மேடையில் பேசவுள்ளார்.

கூட்டத்திற்கு திரளாக மக்களை வரவேற்று ஆதரவுகள் சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் மகளிர் அணியினரிடம் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மகளிர் காங்கிரஸ் மாநில செயலாளர் பாத்திமா, மாவட்ட துணைத் தலைவர்களான பாஞ்சாலி, கீதா சிவதாஸ், ஷீபா, எலப்புள்ளி கிராமப் பஞ்சாயத்து தலைவர் ரேவதி பாபு, மன்னார்க்காடு பிளாக் பஞ்சாயத்து தலைவர் ப்ரீதா, மகளிர் அணி மாவட்ட காசாளர் உஜா பாலாட் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தொடர்ந்து, பாலக்காடு நாடாளுமன்ற வேட்பாளர் வி.கே.ஸ்ரீகண்டனுக்கும், ஆலத்தூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரம்யா ஹரிதாஸிற்கும் வாக்களிக்குமாறு மக்களிடம் ஆதரவு கேட்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

The post பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Palakkad District Congress Consultative Meeting ,Palakkad ,Congress District Committee ,President ,Dhangappan ,Congress ,Sindhu Balakrishnan ,Palakkad District Congress Committee ,Palakkad Parliamentary Constituency Election Committee ,Dinakaran ,
× RELATED திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில்...