×

புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஏப். 17: புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணபிரபு என்பவரின் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தான் எஸ்பிஐ வங்கி அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார். மேலும், கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க ஓடிபி சொல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து கிருஷ்ணபிரபு ஓடிபி சொன்னவுடன் அவரது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.2 லட்சம் திருடு போனது. இதேபோன்று காரைக்காலை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரும் மர்ம நபர் ஒருவர் கேட்டதால் ஒடிபி கூறியுள்ளார். உடனே கிரெடிட் கார்டில் இருந்து ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் திருடு போனது. மேலும், புதுச்சேரி தேவிபாலா என்பவரின் கிரெடிட் கார்டில் இருந்து அவரது அனுமதியின்றி ரூ. 59 ஆயிரம் திருடு போனது. இதுசம்பந்தமாக அவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் புதுச்சேரியை சேர்ந்த ஸ்ேரயா என்பவர் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை தேடியபோது டாஸ்க் முடித்தால் வருமானம் கிடைக்கும் என்பதை நம்பி இணையவழி மோசடிக்காரர்கள் கூறியதை தொடர்ந்து அவர் ரூ.91 ஆயிரம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி டாஸ்க் முடித்துள்ளார். ஆனால் அவருக்கு வருமானம் கிடைக்காமல் அவரது பணத்தை ஏமாற்றியுள்ளனர். இதேபோன்று புதுச்சேரியை சேர்ந்த பிரியா என்பவர் மோடி ஆப் மூலம் கடன் பெற்றுள்ளார். பிறகு வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் மோடி ஆப் மூலம் மீண்டும் பணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் உன் போட்டோவை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடப்படும் என மிரட்டியதால் ரூ.13 ஆயிரம் ஆன்லைன் மூலமாக செலுத்தியுள்ளார். இதுகுறித்து ஆன்லைன் மோசடியில் ஏமாந்தவர்கள் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Krishna Prabhu ,SBI Bank ,OTP ,
× RELATED 9வயது சிறுமி கொலை வழக்கு புதுவை...