- காரைக்குடி
- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அழகப்பா மேலாண்மை நிறுவனம்
- மேலாண்மை நிறுவனம்
- சந்திரமோகன்
- துணை வேந்தர்
- ஜி ரவி
- தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு
- தின மலர்
காரைக்குடி, ஏப். 17: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அழகப்பா மேலாண்மை நிறுவனம் சார்பில் அரசு வழிகாட்டுதலின்படி மாண்புமிகு வேட்பாளர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மேலாண்மை நிறுவன பேராசிரியர் சந்திரமோகன் வரவேற்றார். துணைவேந்தர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கை செலுத்துவதில் மாணவர்களின் பங்களிப்பு 100 சதவீதம் இருக்க வேண்டும்.
வாக்குக்காக பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் அறிவுறுத்த வேண்டும். வாக்குக்கு பணம் வாங்குவது தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம், வளர்ச்சி இருக்கவே இருக்காது, என்றார். தனியார் நிறுவன இயக்குநர் ராஜமோகன் நன்றி கூறினார். இந்திய அரசியலைப்பு மற்றும் தேர்தல் அமைப்பு குறித்து வினாடி வினா மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் என 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
The post தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.