×

ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி

ஸ்ரீநகர், ஏப்.17: ஜம்மு காஷ்மீரில் கந்தபால் நவ்காம் அருகே ஜீலம் ஆற்றில் நேற்று பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. எனினும் சிறுவர்கள் உட்பட படகில் 15 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.

The post ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Srinagar ,Jeelam River ,Kandapal Navkam ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் விமான...