×

குற்றால அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு செய்த அடிப்படை வசதிகள் என்ன? அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு

மதுரை: குற்றால அருவிகளுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தென்காசி மாவட்டம் குற்றால அருவி மற்றும் அதன் பாதைகள், குற்றாலநாதர் சுவாமி கோயில் சொத்து உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குற்றால அருவி பாதைகள், திருக்கோயில் சொத்து ஆக்கிரமிப்புகள் அகற்றம் மற்றும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தென்காசி கலெக்டர் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 2ம் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

The post குற்றால அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு செய்த அடிப்படை வசதிகள் என்ன? அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Icourt branch ,Icourt ,Madurai Branch ,Krishnasamy ,Tenkasi ,District ,Dinakaran ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...