- மட்டைப்பந்து
- இந்திய அணி
- டி20 தொடர்
- வங்காளம்
- மும்பை
- புதுவரவுகள்
- ஆஷா சோபனா
- சஜனா சஜீவன்
- பெண்கள் பிரீமியர் லீக்
- டீம் இந்தியா
- தின மலர்
மும்பை: மகளிர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷா சோபனா மற்றும் சஜனா சஜீவன் ஆகிய புதுமுகங்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
வங்கதேசத்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் புதிய முகங்களில் ஆஷா சோபனா மற்றும் சஜனா சஜீவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மகளிர் பிரீமியர் லீக்கில் ஆஷா சோபனா மற்றும் சஜனா சஜீவன் ஆகியோர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சோபனா மகளிர் பிரீமியர் லீக்கில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனையாக வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். யுபி வாரியர்ஸுக்கு எதிராக 5/22 என்ற எண்ணிக்கையை பதிவு செய்தார். 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளுடன், ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் சோஃபி மோலினக்ஸ் உடன் இணைந்து, லீக்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
சஜனா சஜீவன் மகளிர் பிரீமியர் லீக்கில் தொடக்க ஆட்டத்திலேயே அதிரடியாக தன்னை இந்த உலகுக்கு அறிவித்தார். அவர் கடைசி பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தை தனது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வென்று கொடுத்தார்.
16 பேர் கொண்ட அணிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கு தயாராகி வரும் இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியமானதாக இருக்கும்.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (C), ஸ்மிருதி மந்தனா (WC), ஷபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, சஜனா சஜீவன், ரிச்சா கோஷ் (WK), யாஸ்திகா பாட்டியா (WK), ராதா யாதவ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், அமஞ்சோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், சைகா இஷாக் பாட்டீல் , ஆஷா சோபனா, ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது.
The post மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.