×

கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

துபாய்: கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீர் பெருமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளை வரை பெருமழை நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக துபாய், ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இன்று காலையில் முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை நாளை வரை நீடிக்கும் என ஐக்கிய அரபு அமீரக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

நாளை வரை கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு! appeared first on Dinakaran.

Tags : Dubai ,Sharjah ,United Arab Emirates ,Dinakaran ,
× RELATED துபாய் நாட்டில் மண்ணிட்டு மூடிய...