×
Saravana Stores

அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு

புதுக்கோட்டை, ஏப்.16:நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இன்னும் இரண்டு தினங்களே உள்ளதால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்டியினர் வீதிவீதியாக பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வரும் 1ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் பறக்கும்படைகள், போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணங்கள், நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியுடனும், விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியுடனும், ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதிகளை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியுடனும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்தந்த கொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரசாரம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சியினரும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களது பரப்புரை பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் தங்களது மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், கிளைச் செயலாளர், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளர் வருகைக்கு அவரவர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், இளைஞர்கள், வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தேர்தல் களம் திருவிழா களமாக மாறி உள்ளது. அரசியல் கட்சியினர் ஒருபுறம் பரபரப்பான சூழலில் இயங்கி வரும் நிலையில், மறுபுறம் அரசியல் கட்சியினர் வெற்றியை இலக்காக கொண்டு பிரசாரத்தை தீவிர படுத்தியுள்ளனர்.

இதனிடையே சுயேச்சை வேட்பாளர்களும் பொதுமக்களை சந்தித்து தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் தேர்தல் அலுவலர்களும் பரபரப்புடன் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்னதாக எந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருத்தல், அவற்றுக்கு 24 மணி நேரமும் போலீஸ் காவலுடன் கண்காணிப்பு, வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லுதல், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், நடத்துதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு, என அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தேர்தல் அலுவலர்கள் பரபரப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவ படையும் புதுக்கோட்டை மாவட்டதிற்கு வந்துள்ளது. இது தவிர மாவட்ட போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பரப்புரை மக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வீடுவீடாக சென்று பூத் ஸ்லிப் கொடுக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

தேர்தல் அலுவலர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குதல், வாக்குச்சாவடி மையங்களில் சாய்தளம் நடைமேடை, மின் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, ஆகியவை சரியாக உள்ளதா என்பதனையும் ஆய்வு செய்துள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கும் படி காவல் உயரதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 17ம் தேதி மாலையுடன் வேட்பாளர்கள் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் பிரசாரம் முடிய இரு தினங்களே உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது.

The post அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Enlightenment Utopia Information Party ,Pudukottai ,Tamilnadu ,Enlightenment Karupiya information parties ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு