×

பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

தர்மபுரி, ஏப்.16: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி போயர் தெருவைச் சேர்ந்தவர் பூங்காவனம். பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி. இவர்களது மகள் புனிதா (15), அரசு மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி காலை பூங்காவனத்திற்கும், தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை கண்ட புனிதா, பெற்றோரை சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர், வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றார். இந்த நிலையில், பள்ளியில் இருந்த புனிதா திடீரென வாந்தி எடுத்துள்ளார்.

ஆசிரியர்கள் அவரிடம் கேட்ட போது, தனது பெற்றோர் இடையே ஏற்பட்ட தகராறால் மனஉளைச்சல் ஏற்பட்டு, விஷத்தை குடித்து விட்டு வந்ததாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்து, பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புனிதா சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுபற்றி பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Parkavanam ,Paparapatti Boyer Street, Dharmapuri District ,Devi ,Punita ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு