×

பொய் போட்டி மோடி நம்பர் ஒன் அண்ணாமலைக்கு 2வது இடம்தான்: சொல்கிறார் கருணாஸ்

திண்டுக்கல் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து, நேற்று நடிகர் கருணாஸ், வத்தலக்குண்டு பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது: படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு. எனவே பாஜ மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு போதும் அனுமதிக்க கூடாது. உலகில் பொய் சொல்கிறவர்களுக்கு போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இவ்வாறு பேசினார்.

The post பொய் போட்டி மோடி நம்பர் ஒன் அண்ணாமலைக்கு 2வது இடம்தான்: சொல்கிறார் கருணாஸ் appeared first on Dinakaran.

Tags : Poi Botti ,Modi ,Karunas ,Dindigul CPM Party ,Satchidananda ,Vatthalakundu ,Agayathama ,BJP ,India ,Annamalai ,
× RELATED பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!