×

அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் காலை 11 மணிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் சுகாதாரத்துறை பணியாளர்கள் பொதுமக்களுக்கு செலுத்தும் தடுப்பூசியை காலை 11 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை, தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

வெப்பநிலை அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் மக்களுக்கு பயனுள்ள சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்குகள், அனைத்து சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் மருந்துகளை வைக்கும் குளிர் சங்கிலி அறையில் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மருந்து கிடங்குகளில் சுவர்களுக்கும் மருந்து அலமாரிக்கும் இடையில் போதிய இடைவெளி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இது சுவர்களில் இருந்து வரும் வழக்கமான வெப்பத்தால் மருந்துகள் சேதமடைவதைத் தடுக்கும். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசிகள் செலுத்தும் போது நர்ஸ்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் காலை 11 மணிக்குள் முகாமில் சென்று தடுப்பூசி போட்டு விட்டு திரும்பிவிட வேண்டும். தற்பொழுதைய சூழ்நிலையில் இது மிகவும் பாதுகாப்பானதாக அமையும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் காலை 11 மணிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Public Health Department ,CHENNAI ,Directorate of Public Health ,Public Health ,Selvavinayagam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்...