×

என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் அறிவிக்கும் திட்டங்களை எல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன்: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம்

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துரைப்பாக்கம் ஏகேடிஆர் டவர், ஓஎம்ஆர் சாலை, ராஜ் நகர் சிக்னல், குமரன் குடில், மவுண்ட் பேட்டன் தெரு, மேட்டுக்குப்பம், சூளைமா நகர், எழில் நகர், கண்ணகி நகர், ஒக்கியம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்பபோது, அவர் பேசியதாவது: தென்சென்னை தொகுதி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது, வாகன நெரிசலை எப்படி குறைப்பது, மக்கள் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ்வது, மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தனி அதிகாரம் கிடைக்க ஒரு வழிகாட்டுதல் குழு அமைப்பது உள்ளிட்ட நிறைய திட்டங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளேன்.
என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் போது, நான் அறிவிக்கும் திட்டங்களை எல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன்.

அடுக்குமாடி குடியிருப்பு மக்களிடம் நான் ஜூம் மீட்டிங் நடத்தினேன். அவர்களின் குறைகளை கேட்டு ஆதரவு கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்களிடம் நான் வாக்கு சேகரிக்க கூடாது என்ற நோக்கில் சிலர் இந்த ஜூம் மீட்டிங்கில் ஆபாச படங்களை திட்டமிட்டு பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளோம். என்னிடம் மோத வேண்டும் என்றால் நேரடியாக மோதுங்க. நான் தயாராக இருக்கிறேன். எப்படி இருந்தாலும். எனக்கும் மக்களுக்கும் உள்ள இணைப்பை யாராலும் துண்டிக்க முடியாது. நான் உயர் பதவியில் இருந்து மக்களுக்கான சேவை செய்ய வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் அறிவிக்கும் திட்டங்களை எல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன்: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Parliament ,South Chennai BJP ,Tamilisai Soundararajan ,Chennai ,BJP ,South Chennai ,Duraipakkam AKTR Tower ,OMR Road ,Raj Nagar Signal ,Kumaran ,Chozhinganallur ,Assembly Constituency ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க...