×

ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் ஈட்டுவோர் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு: தமிழக அரசிதழில் வெளியீடு

சென்னை: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம்,  சரக்கு மற்றும் சேவைகளுக்கான மாநில அரசு வரி வசூலித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் மொத்த வருவாயில் வணிகவரித்துறை, 60 முதல், 70 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கிறது. உற்பத்திப் பிரிவை சேர்ந்த வணிகர்கள் வரி செலுத்துவதற்கான வரம்பு,  மாநிலத்துக்குள்ளேயே பொருட்களை வாங்கி, விற்பனை செய்யும் வணிகர்களுக்கான வரி வரம்பு ரூ.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே ஜிஎஸ்டி பதிவு செய்து கொள்கின்றனர். மாநிலத்தில் 10.88 லட்சம் பேர் வரிசெலுத்துவோர்கள் உள்ளனர். இவர்களில் 6.53 லட்சம் வரி செலுத்துவோர் மாநில வரி வரம்புக்கும், 4.35 லட்சம்  வரிசெலுத்துவோர் ஒன்றிய வரி வரம்புக்கு கீழ் வருகின்றனர்.  இவர்களில், ஆண்டுக்கு ரூ.1.50 கோடிக்கு மேல் வருமானம் வருவோர்கள் ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதனால், சிறு குறு தொழில் முனைவோர்கள் மற்றும் வியாபாரிகள்  கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில்  சார்பில் ரூ.2 கோடி வரை வருமானம் வரும் வரி செலுத்துவோர் ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில், அவர்கள் ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்வதில் இருந்து விலக்களித்து தமிழக அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி விதி 2017ன் கீழ் கவுன்சில் பரிந்துரையை ஏற்று ஆணையர் பதிவு பெற்ற நபர்களின் டர்ன் ஓவர் 2020-21ம் நிதியாண்டில் ரூ.2 கோடியில் இருந்து ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. …

The post ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் ஈட்டுவோர் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு: தமிழக அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...