×

வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ராஜேஷ்தாஸூக்கு எப்படி சலுகை காட்ட முடியும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

சென்னை: வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ராஜேஷ்தாஸூக்கு எப்படி சலுகை காட்ட முடியும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 2021ல் பெண் எஸ். பி.க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல ஆண்டுகள் காவல்துறைக்கு தலைமை வகித்த நான் சிறை சென்றால் தனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என ராஜேஷ்தாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராஜேஷ் தாஸ்க்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது.

அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ராஜேஷ்தாஸூக்கு எப்படி சலுகை காட்ட முடியும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rajeshtazu ,Chennai High Court ,Chennai ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...