×

திருவொற்றியூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் குடும்பத்தை விமர்சித்து பேசிய 2 அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வரின் குடும்பத்தை விமர்சித்து பேசிய 2 அதிமுக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருவொற்றியூர் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் தேர்தல் பிரசார தெருமுனை கூட்டம் சாத்துமா நகர் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக அவை தலைவர் ராஜேந்திரன் பேசும் போது, முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து முதல்வரின் குடும்பத்தை அவதூறாக பேசிய ராஜேந்திரன் (55) மற்றும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஜீவல்லால் நகரை சேர்ந்த திருவொற்றியூர் கிழக்கு பகுதி அதிமுக செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம் (60) ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் பிணையில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான ராஜேந்திரன், அஜாக்ஸ் பரமசிவம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து போலீசார் அவர்களை தேடி வருவது திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவொற்றியூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் குடும்பத்தை விமர்சித்து பேசிய 2 அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : 2 AIADMK ,Chief Minister ,Tiruvottiyur ,AIADMK ,Tiruvotiyur East ,2 ADMK ,Tiruvotiyur ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சர்...