×

பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க ஆணை

மதுரை: பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. புதிய பேருந்து வாங்க டெண்டர் விடுவது உள்ளிட்ட உத்தரவு குறித்து அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் தர வேண்டுமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

The post பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Department of Charities ,Palani temple ,Kriwala ,Madurai ,High Court ,ICourt ,Department of Charity ,Public Works Department ,Charity Department ,
× RELATED அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு...