×
Saravana Stores

தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot மூலம் டிக்கெட்டுகள் பெறும் சேவை தற்காலிகமாக இயங்கவில்லை : மெட்ரோ ரயில் நிர்வாகம்!!

சென்னை :தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் தற்காலிகமாக டிக்கெட் பெற இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள் கவுண்டரில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதை தவிர்க்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகள் டிக்கெட்டுகள் பெற பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் தற்காலிகமாக டிக்கெட் பெற இயலாது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot மூலம் டிக்கெட்டுகள் பெறும் சேவை தற்காலிகமாக இயங்கவில்லை.CMRL பயண அட்டை, மொபைல் செயலி, Paytm, Phonepe, சிங்கார சென்னை கார்டு போன்ற பிற சேவைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல் கிடைக்கும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளை பெறலாம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot மூலம் டிக்கெட்டுகள் பெறும் சேவை தற்காலிகமாக இயங்கவில்லை : மெட்ரோ ரயில் நிர்வாகம்!! appeared first on Dinakaran.

Tags : Metro Rail Administration ,CHENNAI ,Chennai Metro ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல்...