×

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள உருவச் சிலைக்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் நே.சிற்றரசு, த.வேலு எம்எல்ஏ, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ,

இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏக்கள் ஜெ.கருணாநிதி, எழிலன் நாகநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா, செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்ட அலுவலகங்ளிலும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், திமுக முன்னணியினர், தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். .காங்கிரஸ் அலுவலகம்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்திய மூர்த்தி பவனில் அம்பேத்கர் திருவுருவப்படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், அசன் மவுலானா எம்எல்ஏ, பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன், ஆர்.டி.ஐ.பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன், எஸ்சி,எஸ்டி பிரிவு பொதுச்செயலாளர் மா.வே.மலையராஜா, துணை தலைவர் செ.நிலவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Ambedkar ,Mani Mandapam ,Raja Annamalaipuram, Chennai ,CHENNAI ,M. K. Stalin ,Raja Annamalaipuram ,Mani Mandapam, Chennai ,Anna Vidyalaya, Chennai ,Mani ,Mandapam ,Raja ,Annamalaipuram ,Equality Day Pledge ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...