×

இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு காங். வேட்பாளர் விஜய் வசந்திற்கு ஆதரவு

நாகர்கோவில், ஏப்.14: கன்னியாகுமரி நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐஎன்டியுசி தொழிற்சங்க சார்பில் ஐஎன்டியுசி கிழக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில் கூட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஐஎன்டியுசி தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் அமீர்கான் கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் விஜய் வசந்த்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர். இதில் மாநில துணை தலைவர்கள் முகமது அழகேசன், விக்னேஷ், கார்த்திக், செயல் தலைவர்கள் முகம்மது இலியாஸ், காட்வின், சுரேஷ், பகவதி கண்ணு, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு காங். வேட்பாளர் விஜய் வசந்திற்கு ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Indian Trade Union Confederation Cong ,Vijay Vasant ,Nagercoil ,Kanyakumari Parliamentary India Alliance ,Vijay Vasanth ,trade union federations ,India ,INDUC… ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது