×

சில்லி பாய்ன்ட்…

* நியூசி. டி20 அணி
பாக். – நியூசி. அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் டி20 ராவல்பிண்டியில் 18ம் தேதி நடக்கிறது. இத்தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி. டீன் பாக்ஸ்கிராப்ட், பென் லிஸ்டர், கோல் மெக்கான்சி, ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், வில் ஓ’ரூர்கே, டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்பெர்ட், ஈஷ் சோதி.

* வருகிறார் நடால்
காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருக்கும் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், அடுத்த வாரம் தொடங்க உள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்குவதை உறுதி செய்துள்ளார்.

* 6 பந்தில் 6 சிக்சர்!
யுவராஜ், போலார்டுக்கு பிறகு சர்வதேச டி20ல் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்த 3வது வீரர் என்ற பெருமை நேபாள அணியின் திபேந்திரா சிங் எய்ரீ (24 வயது) வசமாகி உள்ளது. கத்தார் அணிக்கு எதிராக அல் அமெரத்தில் நேற்று நடந்த போட்டியில், கம்ரான் கான் வீசிய ஓவரின் அனைத்து பந்தையும் சிக்சராகத் தூக்கி அசத்தினார் திபேந்திரா (21 பந்தில் 64 ரன், 3 பவுண்டரி, 7 சிக்சர்).

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Newsy ,T20 ,Rawalpindi ,Zealand ,Michael Bracewell ,Dinakaran ,
× RELATED ரூதர்போர்டு, அல்ஜாரி அதிரடியால்...