×

லாலு கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு 1 கோடி பேருக்கு அரசு வேலை பெண்களுக்கு ரூ.1 லட்சம் நிதி

பாட்னா: லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, 1 கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று வெளியிட்டார். இதில், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு 1 கோடி அரசு வேலை வழங்கப்படும், ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் நிதி உதவி, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம், எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும, பீகாரில் புதிதாக 5 விமான நிலையங்கள் கட்டப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ‘‘வேலையில்லா திண்டாட்டம்தான் நாட்டின் தற்போதைய மிகப்பெரிய பிரச்னை. எனவே வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து நாடு விடுதலை பெற, வரும் சுதந்திரத் தினத்திலிருந்து 1 கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் பணி தொடங்கப்படும். இதே போல வரும் ரக்ஷா பந்தனில் இருந்து நாடு முழுவதும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும், அக்னிபாதை திட்டம் ரத்து செய்யப்படும்’’ என்றார். பீகாரில் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டமாக நடக்க உள்ளது.

The post லாலு கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு 1 கோடி பேருக்கு அரசு வேலை பெண்களுக்கு ரூ.1 லட்சம் நிதி appeared first on Dinakaran.

Tags : Lalu ,Patna ,Rashtriya ,Janata Dal ,RJD ,India ,Lalu party ,Dinakaran ,
× RELATED லாலு பிரசாத் யாதவ் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து