×

மனைவியை கொன்று விட்டு தலைமறைவு இந்திய வம்சாவளி தலைக்கு ரூ.2 கோடி பரிசு அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவியை கொன்று விட்டு தலைமறைவான இந்திய வம்சாவளியை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.2.1 கோடி பரிசு அளிக்கப்படும் என எப்பிஐ அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சேத்தன்பாய் படேல்(32) மற்றும் அவரின் மனைவி பாலக் ஆகியோர் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், ஹேனோவர் நகர உணவகத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 2015ம் ஆண்டு ஏப்.12ம் தேதி கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது சேத்தன்பாய், பாலக்கை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்று விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்ய முடியவில்லை. எனவே சேத்தன்பாய் படேலை மிக தீவிரமாக தேடப்படும் 10 பயங்கர குற்றவாளிகள் பட்டியலில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு(எப்பிஐ) சேர்த்துள்ளது. அவரை பற்றிய தகவல் தந்தால் ரூ.2.1 கோடி வெகுமதி அளிக்கப்படும் என எப்பிஐ அறிவித்துள்ளது.

The post மனைவியை கொன்று விட்டு தலைமறைவு இந்திய வம்சாவளி தலைக்கு ரூ.2 கோடி பரிசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Washington ,FBI ,US ,Chetanbhai Patel ,Palak ,Maryland, USA ,
× RELATED டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் விவரத்தை வெளியிட்டது FBI