×

புதுப்பட்டி ஊராட்சியில் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

 

கந்தர்வகோட்டை,ஏப்.13: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சியில் கந்தர்வகோட்டையை தலைமை இடமாகக் கொண்டு தங்கி தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கி வரும் குடுமியான்மலைவேளாண் கல்லூரி மாணவிகள் கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகளை சந்தித்து விவசாய அனுபவங்களை கேட்டறிந்து மாணவிகள் கல்வி பயின்ற அனுபவங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி அனுபவங்களை பரிமாறி கொள்கின்றனர்.

கந்தர்வகோட்டை வேளாண்மை விரிவாக்கம் மையத்திற்கு நேரில் சென்று வேளாண்மை இயக்குனர் அன்பரசனை நேரில் சந்தித்து சுற்று வட்டார கிராமப்புற முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை கற்று வருகின்றனர். .இதன் தொடர்ச்சியாக புதுப்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயிகளை சந்தித்து வயல் வரப்பிற்கு சென்று இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களை குறித்து பேசினா்.

மேலும் ஆடுதுறை 37 என்ற நெல் நாற்றுகளை உயிரி உரமான அசோஸ்பைரில்லம் கொண்டு நாற்றுநேர்த்தி செய்முறை விளக்கத்தை மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்தனர் .இதில் மாணவிகள் அருள் ஜோதி, ஹேமா ஸ்ரீ, கார்த்திஸ்வரி,சௌமியா, ஸ்ரீவர்ஷினி, செய்யது மதுதாள், மற்றும் தேன்மொழி ஆகியோர் கந்தர்வகோட்டையில் தங்கி இருந்து களப்பயிற்சி பெற்று வருகின்றனர்.

The post புதுப்பட்டி ஊராட்சியில் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Pudupatti panchayat ,Kandarvakottai ,Kandarvakottai Panchayat Union ,Pudukottai District ,Panchayat Union Pudupatti Panchayat ,Kandharvakottai ,Kudumianmalaivelan college ,Tamil Nadu Agricultural University ,
× RELATED திறந்தவெளியில் கிடக்கும் நெல்மூட்டைகள்