×
Saravana Stores

கந்தர்வகோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

கந்தர்வகோட்டை, அக்.22: கந்தர்வக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அறிவழகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் எவ்வாறு தம்மையும் ,பொதுமக்களையும், பொருள்களை பாதுகாப்பது எவ்வாறு என விளக்க உரையும் செயல்முறையும் செய்து காட்டினார்.

துணை முதல்வர் ஸ்ரீதர் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் கூறும்போது, காட்டாறு வெள்ளத்தில் குறுக்கே செல்லக்கூடாது, மின் கம்பங்கள் அருகில் கால்நடைகளை கட்டக்கூடாது , முக்கிய ஆவணங்களை பத்திரமாக நீர் போகாத வண்ணம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநல பணி திட்ட அலுவலர் செல்வகுமார் செய்திருந்தார். ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post கந்தர்வகோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Gandharvakot Polytechnic College ,Gandharvakottai ,Gandharvakottai Government Polytechnic College ,Government Polytechnic College ,Pudupatti Panchayat ,Kandarvakottai, Pudukottai District ,Fire Station ,In-charge Officer ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டையில் அதிகளவில்...