×

222 கிலோ வெள்ளி திருடிய ஊழியர் கைது

சென்னை, ஏப்.13: தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘ஜலானி’ என்ற பெயரில் மொத்த வெள்ளி விற்பனை கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ஜலானி, கடந்த 10ம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கடையில் உள்ள ₹1.80 கோடி மதிப்புள்ள 222 கிலோ வெள்ளி மாயமானது. கடையில் பணியாற்றும் சரவணன் (44), அஜ்மல் (44), மகேந்திரன் (34), வினோத் (22), பிங்கேஷ் (43), மதன் (24) ஆகிய 6 ஊழியர்கள் மீது சந்தேகம் உள்ளது, என தெரிவித்து இருந்தார். அதன்பேரில், போலீசார் 6 பேரை விசாரணை நடத்திய போது, அதில் ஊழியர் சரவணன் தனது நண்பர்களுடன் இணைந்து 222 கிலோ வெள்ளியை திருடி விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 15 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள வெள்ளியை மீட்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 222 கிலோ வெள்ளி திருடிய ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Jalani ,T. Nagar North Osman Road ,Bandi Bazaar ,station ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்